சென்னை :விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வரவிருந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார். சென்னையைச் சேர்ந்த சுவாதியும், தானேஸ்வரனும் 2023-ல் காதல் திருமணம் செய்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். விவாகரத்து வழக்கின் முதல் விசாரணை இன்று நடக்கவிருந்த நிலையில் சுவாதி நேற்று தற்கொலை செய்து கொண்டார்.