×

பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமை கண்டித்து மக்கள் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பல்வேறு பகுதியில் பட்டியலின மக்கள் மீது வன்கொடுமை, கொலை, கொள்ளை என நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனை கண்டித்து பல்வேறு எதிர்க்கட்சியினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, அரசுக்கு எதிராக கண்டனங்கள் எழுப்பி வருகின்றனர்.

அதன்படி, தமிழகத்தில் பட்டியல் இன மக்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்று வரும் சாதிய வன்கொடுமை தீண்டாமை மற்றும் சாதிய ஆணவ படுகொலையை தடுக்க தவறிய அரசு கண்டித்து, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மக்கள் தேசம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சிலம்பு தலைமை தாங்கினார். மேற்பட்ட மக்கள் தேசிய கட்சியினர் அரசை கண்டித்து, கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Makkal Desam Party ,Kanchipuram Taluk Office ,Tamil Nadu ,
× RELATED மதுராந்தகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி