கீழ்வேளூர் தொகுதியில், வேட்டைக்காரனிருப்பு பகுதியில் குழந்தைகள் மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என நாகை மாலி கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர்;
குழந்தை நல மையங்களை சீர்மிகு மையங்களாக மாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு, அனுமதி அளிக்கப்பட்ட 1,503 மையங்களில் 1,203 மையங்களுக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தாண்டு 500 குழந்தைகள் மையங்களுக்கு கட்டிடம் கட்ட முதலமைச்சர் ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
சாலை அருகே அமைந்துள்ள குழந்தைகள் மையங்களுக்கு சுற்றுசுவர் கட்டுகொடுப்பது அவசியமாகிறது. எனவே முன்னுறிமை அடிப்படையில் உறுப்பினர் பட்டியல் கொடுக்கும்பட்ச்சத்தில் அது தொடர்பாக அரசு பரிசீலிக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
The post 500 குழந்தைகள் மையங்களுக்கு கட்டிடம் கட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு : அமைச்சர் கீதா ஜீவன் appeared first on Dinakaran.