புதுச்சேரி வியாபாரிகள் தங்களது கடை பெயரை கட்டாயம் தமிழில் வைக்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொழில் நிறுவனங்கள், கடைகளின் பெயர் பலகை தமிழில் பெரிதாக வைக்க வேண்டும். அதற்கு அடுத்த அளவில் ஆங்கிலத்திலும் அதற்கும் குறைந்த அளவில் விருப்பமுள்ள பிற மொழிகளில் வைக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.
இதை பெரும்பாலானவர்கள் பின்பற்றாமல் தமிழ் எழுத்துக்களை சிறியதாகவும், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளை பெரிதாக எழுதி உள்ள பலகைகள் பல பகுதிகளில் காணப்படுகிறது. தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பெயர் பலகைகள் சரி செய்யவில்லை என்றால் அந்த கடைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
The post புதுச்சேரியில் உள்ள கடைகளின் பெயர் பலகைகளில் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு appeared first on Dinakaran.