அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சூர்யாவின் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது தற்கொலை செய்தது சூர்யா என்பது தெரியவந்தது. திருத்தணி போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். பைக்குக்கு மாத தவணை செலுத்துவதற்காக உறவினர் ஒருவர் சூர்யாவிடம் பணம் கொடுத்துள்ளார்.
அந்த பணத்தை சூர்யா செலவு செய்துவிட்டார். இதனால் உறவினர் கேள்வி கேட்டதால், வேதனையில் சூர்யா தற்கொலை செய்துக்கொண்டதாக விசாரணையில் தெரிய வந்தது. தற்கொலை செய்த சூர்யா 10 ஆண்டுகளுக்கு முன்பு நிரோஷா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதும், இவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post தவணை பணத்தை செலவு செய்துவிட்டு வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.