திருவாடானை, மார்ச் 18: திருவாடானையில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு உள்ள அதிர்ஷ்ட விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றது. இந்த பிரார்த்தனையில் தாமரை மலர்களால் கூடிய சிறப்பு அலங்காரத்துடன் அதிர்ஷ்ட விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார். இந்த சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாட்டினை வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
The post சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் appeared first on Dinakaran.