கோயிலுக்கு அரைகுறை ஆடையுடன் வருபவர்கள் முட்டாள்கள் என்று நடிகை பாலிவுட் கங்கனா ஆவேச பதிவிட்டுள்ளார். இமாச்சல் பிரதேச மாநிலம் காங்க்ரா மாவட்டம் பைஜ்நாத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற புராதன சிவன் கோயிலுக்கு சென்ற பெண் ஒருவர், அரைகுறை ஆடையுடன் கோயில் வளாகத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றித் திரிந்தார். அவரது புகைப்படம் மற்றும் வீடியோவை எடுத்து சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வெளியிட்ட பதிவில், ‘அந்தப் பெண் அணிந்திருக்கும் ஆடைகள் மேற்கத்திய ஆடைகள் ஆகும். அவை ஆங்கிலேயேர்களால் கண்டுபிடிக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டவை.
நான் ஒருமுறை இத்தாலியின் வாடிகன் நகருக்கு சென்ற போது, சாதாரணமாக ஷார்ட்ஸ் மற்றும் டி ஷர்ட் அணிந்திருந்தேன். ஆனால் அவர்கள் என்னை வளாகத்திற்குள் கூட அனுமதிக்கவில்லை. மீண்டும் நான் தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்று வேறு உடை மாற்ற வேண்டியிருந்தது. இரவுநேரத்தில் அணியும் ஆடைகளை, இந்த சோம்பேறிகள் கோயில்களுக்கு அணிந்து வருகின்றனர். கோயில்கள் குறித்த புரிதல்கள் அவர்களுக்கு இல்லை. இத்தகைய முட்டாள்களுக்காக ஆடை கட்டுப்பாடு குறித்த கடுமையான விதிகளை ஏற்படுத்த வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவரது ஆபாச படங்களை மறுபதிவிட்டு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
The post கோயிலுக்கு அரைகுறை ஆடையுடன் வருவதா? நடிகை கங்கனா ஆவேச பதிவு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.