சாய்ரா பானு வேண்டுகோள் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘முன்னாள் மனைவி’ என்று அழைக்க வேண்டாம்

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானும் நானும் விவாகரத்து பெறவில்லை. அதனால் என்னை ரஹ்மானின் முன்னாள் மனைவி என்று அழைக்க வேண்டாம் என சாய்ரா பானு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சாய்ரா பானு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “ரஹ்மானுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது அவர் கடவுள் அருளால் பூரண நலத்துடன் இருக்கிறார். நாங்கள் இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை. இன்னும் இருவரும் கணவன் மனைவிதான் என்பதை அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன்.

எனது உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால்தான் நாங்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். அதனால் தயவுசெய்து, என்னை ரஹ்மானின் ‘முன்னாள் மனைவி’ என்று அழைக்க வேண்டாம். அவரது குடும்பத்தார் மற்றும் அவரை கவனித்துக் கொள்பவர்கள் அவருக்கு மேலும் மன அழுத்தத்தை கொடுக்க வேண்டாம். என் நற்சிந்தனைகள் அனைத்தும் அவரிடமே உள்ளது. அவர் விரைவில் குணம் அடைய வேண்டும்” என கூறியுள்ளார். கடந்தாண்டு இருவருமே தங்களது திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சாய்ரா பானு வேண்டுகோள் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘முன்னாள் மனைவி’ என்று அழைக்க வேண்டாம் appeared first on Dinakaran.

Related Stories: