துரைப்பாக்கம்: சென்னை ராஜீவ்காந்தி சாலை, சோழிங்கநல்லூர் ஆவின் சிக்னலில் அருகே சென்னை குடிநீர் வாரிய சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சீரமைக்காததால் தினமும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடி வீணாக கழிவுநீர் கால்வாய்களில் கலக்கிறது. மேலும், சாலையில் பெருக்கெடுத்து ஓடும் குடிநீரால் அவ்வழியே வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் தவறிவிழுந்து காயமடைகின்றனர். அதிவேகமாக செல்லும் கனரக வாகனங்களை சாலையில் செல்லும் தண்ணீர் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது தெறிக்கிறது. தினமும் குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறுவதால் தார் சாலை ஜல்ல்க்கற்கள் பெயர்ந்து சிதிலமடையும் வாய்ப்புள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குடிநீர் வாரிய குழாய் உடைந்து பல நாட்களான நிலையில் பழுது சீர் செய்யப்படவில்லை. இதனால் தினமும் குடிநீர் வீணாகிறது. தற்போது, கோடைகாலம் தொடங்கிய நிலையில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, குழாய் உடைப்பை உடனடியாக சீர் செய்து குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கைவிடுக்கின்றனர்.
The post குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுக்கும் குடிநீர் appeared first on Dinakaran.