சென்னை: தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்சி, எஸ்டி பணியாளர் நலச்சங்கம் பொதுச்செயலாளர் டாக்டர் டி.மகிமை தாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு பட்ஜெட்டில் உயர்கல்வித்துறைக்கு ரூ.8,494 கோடி ஒதுக்கீடு, சாதிபாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கவுரவிக்கும் வகையில், தகுதி படைத்த ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத் தொகையுடன் கூடிய சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்படும். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைகளுக்கு ரூ.572 கோடி ஒதுக்கீடு, பெற்றோரை இழந்த குழந்தைகள் படிப்பை தொடர மாதம் 2 ஆயிரம் உதவித்தொகை, மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகளில் கூடுதலாக 15 ஆயிரம் இடங்கள், சமக்ர சிக்க்ஷா திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி தரவில்லை என்றாலும் தமிழக மாணவர்களின் கல்வியில் ஒரு துளிகூட பாதிப்பு இருக்காது. கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும். அரசு பள்ளிகளில் 2562 ஆசிரியர்கள் நியமனம். புதிய வரிகள் ஏதுமற்ற, அனைவரும் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ள இப்பட்ஜெட்டை வரவேற்று, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்து கொள்கிறோம்.
The post சமூக ஒற்றுமையை கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து தலா ரூ.1 கோடி ஊக்கதொகை: எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு appeared first on Dinakaran.