வாக்காளர் அடையாள அட்டை – ஆதார் எண் இணைப்பு தலைமை தேர்தல் ஆணையர் நாளை மறுதினம் ஆலோசனை

புதுடெல்லி: மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஒரு வாக்காளர் அட்டை எண்ணும், உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு வாக்காளர் அட்டை எண்ணும் ஒரே எண்ணாக உள்ளது. இதன் மூலம் மேற்குவங்கத்தில் போலி வாக்காளர்கள் அல்லது வேறு மாநிலத்தை சேர்ந்த வாக்காளர்கள் உள்ளனர் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இந்த சூழலில் நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பதை கட்டமாயமாக்கும் பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வரும் செவ்வாய்க்கிழமை(18ம் தேதி) ஒன்றிய உள்துறை செயலாளர், சட்டப்பேரவை செயலாளர் மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணை இணைப்பதற்கான நடைமுறை சாத்தியங்கள், பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

* தவறுகளை மூடி மறைக்கும் செயல்
திரிணாமுல் காங்கிரஸ் துணைத்தலைவர் சகாரிகா கோஷ் கூறுகையில், ‘நகல் வாக்காளர் அடையாள அட்டை எண், வாக்காளர் பட்டியல் தரவு மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுக்கு தலைமை தேர்தல் ஆணையம் முன்பு 3 அறிக்கைகளை வௌியிட்டது. இப்போது வாக்காளர் அடையாள அட்டை – ஆதார் எண் இணைப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. இது வாக்காளர் பட்டியல் மோசடிகள் குறித்த தவறுகளை மூடி மறைக்கும் செயல்’ என்று தெரிவித்தார்.

The post வாக்காளர் அடையாள அட்டை – ஆதார் எண் இணைப்பு தலைமை தேர்தல் ஆணையர் நாளை மறுதினம் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: