திருவனந்தபுரம்: கேரளாவில் ஓட்டல்கள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் காவலாளிகள் அமர்வதற்கு இருக்கை, வெயில், மழை காலங்களில் குடை, ரெயின் கோட் தொப்பி ஆகியவற்றை கொடுக்க வேண்டும் என்று கேரள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவன் குட்டி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ‘கேரளாவில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள், கடைகள் மற்றும் ஓட்டல்களில் காவலாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுப்பதில்லை என ஏராளமான புகார்கள் வந்தன. நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள ஓட்டல்களில் காவலாளிகள் கடும் வெயிலில் நின்றபடி பணிபுரிகின்றனர். இதை அனுமதிக்க முடியாது. எனவே காவலாளிகள் அமர்வதற்கு இருக்கை மற்றும் வெயில், மழை காலங்களில் குடை, தொப்பி, கண்ணாடி ரெயின் கோட் ஆகியவற்றை அந்தந்த நிறுவனங்கள் வழங்க வேண்டும். இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை அந்தந்த பகுதி தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி உறுதி செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கேரளாவில் ஓட்டல்கள், நிறுவனங்களில் காவலாளிகள் அமர்வதற்கு இருக்கை: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் உத்தரவு appeared first on Dinakaran.