×

நான் முதல்வன் திட்டத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: முதல்வரின் கனவுத்திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டம் உலகை வெல்லும் இளைஞர்களை தமிழ் மண்ணில் படைக்கும் உயரிய நோக்கம் கொண்டது. நாட்டின் பிற மாநிலங்களும் பின்பற்றும் இத்திட்டத்தில் இதுவரை சுமார் 41.38 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். மேலும் 1 லட்சம் ஆசிரியர்களுக்கும் உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற மாணவர்களில் 1.04 லட்சம் மாணவர்கள் இதுவரை வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர்.

ஒன்றிய குடிமை பணி தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்திட ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு, அவர்கள் முதல்நிலை தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 ம், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இதை தொடர்ந்து முதன்மை தேர்வில் பெற்றி பெற்று நேர்முக தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்திட்டத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்படும்.

 

The post நான் முதல்வன் திட்டத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Mahalvar ,I Mudhalvan ,Dinakaran ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...