×

குற்றங்களை கையாள விசாரணை அதிகாரிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

 

திருச்சி, மார்ச் 14: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள பெண் காவல் புலன் விசாரணை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி திருச்சி காவல் துறை பணியிடை பயிற்சி மையத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் சுதர்சன் தலைமையில் 13.03.25 நடைபெற்றது.

மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு இளஞ்சிறார் நீதி சட்டம் 2015 பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 சட்டங்களின் பிரிவுகள் குறித்தும், குழந்தை நலக்குழு இளஞ்சிறார் நீதிக் குழுமம் மற்றும் குழந்தைகள் உதவி மையம் செயல்பாடுகள் பணிகள் நடைமுறைகள் குறித்தும், கிராம சபைக் கூட்டம், குழந்தை பாதுகாப்பு குழுக்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவில் பங்கேற்புகள் குறித்து பயிற்சி அளித்தார். பயிற்சியில் 85க்கும் மேற்பட்ட திருச்சி மற்றும் மாநகரம் கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் ரயில்வே காவல் ஆளிநர்கள் கலந்துக் கொண்டனர்.

The post குற்றங்களை கையாள விசாரணை அதிகாரிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Trichy ,Trichy Police Department ,Training Center ,Sudarsan… ,Dinakaran ,
× RELATED திருவெறும்பூரில் ரூ.6.2 கோடியில் புதிய பேருந்து நிலையம்