போச்சம்பள்ளி, மார்ச் 14: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பல்வேறு இடங்களில் மிதமான மழையும், போச்சம்பள்ளி பகுதியில் கனமழையும் பெய்தது. சூறைகாற்றுடன் மழை பெய்ததால் மா மரங்களில் மா பிஞ்சுகள் உதிர்ந்தது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் நேற்று காலை கடும் பனிப்பொழிவு நிலவியது. குறிப்பாக போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவு பனிப்பொழிவு காணப்பட்டது. சாலைகளில் நிலவிய கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். மேலும் நடைபயிற்சிக்கு செல்வோர் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். காலை 9 மணி வரை பனிப்பொழிவு நீடித்தது. 9 மணிக்கு மேல் கடும் வெயில் வாட்டியது. கடந்த இரு நாட்களாக மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவியது.
The post போச்சம்பள்ளியில் கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.
