×

உற்சவம் நடைபெற்றது. காவேரிப்பட்டணத்தில் நுகர்வோர் காலாண்டு கூட்டம்

காவேரிப்பட்டணம், மார்ச் 14: காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், நுகர்வோர் காலாண்டு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாப்பி பிரான்சினா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நுகர்வோர் சங்க மாவட்ட செயலாளர் காவேரிப்பட்டணம் மாதேஷ் முன்னிலை வகித்தார். சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொது செயலாளர் சந்திரமோகன், பல புகார்களை தெரிவித்து, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு வழங்கினார். கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதி, கணக்கர் சென்னப்பன், தட்டச்சர் நிர்மலாதேவி, சுகாதார மேற்பார்வை அலுவலர் ராஜாமணி, நுகர்வோர் சங்க மாநில துணை தலைவர் பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

The post உற்சவம் நடைபெற்றது. காவேரிப்பட்டணத்தில் நுகர்வோர் காலாண்டு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Festival ,Kauverypattanam ,Kauverypattanam Regional Development Office ,Regional Development Officer ,Poppy Francisina ,Consumer Association District ,Kauverypattanam Mathesh ,Social Consumer Welfare Protection… ,Dinakaran ,
× RELATED ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை