- பரமத்திவேலூர்
- Paramathi
- நகரம்
- பஞ்சாயத்து
- டவுன் பஞ்சாயத்து
- தலைவர் மணி
- மேற்கு மாவட்ட தி.மு.க
- கேஎஸ்…
- தின மலர்
பரமத்திவேலூர், மார்ச் 14: பரமத்தி பேரூராட்சி அலுவலகம் அருகேயுள்ள சமுதாயக் கூடத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் மணி தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ். மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கர்ப்பிணிகளுக்கு கண்ணாடி வளையல், பூ, புடவை, மஞ்சள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில், பரமத்தி ஆத்மா குழுத்தலைவர்கள் தனராசு, சண்முகம், பேரூராட்சி துணைத்தலைவர் ரமேஷ்பாபு, நாவலடி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வளர்மதி வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் மேகலா, சித்த மருத்துவர் சிவகாமி, மருத்துவர் சண்முக வடிவு ஆகியோர் கலந்து கொண்டு, முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை, கற்பகால பராமரிப்பு ஆரோக்கியமான உணவு, தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றி விளக்கி பேசினர். இதையடுத்து கர்ப்பிணிகளுக்கு ஐந்து வகையான கலவை சாதத்துடன் உணவு பரிமாறப்பட்டது. இதில் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு appeared first on Dinakaran.
