இந்நிலையில் வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை ரத்து செய்யக்கூடாது என்றும் புலன் விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவிததார். அப்போது ரங்கராஜன் நரசிம்மன், பழிவாங்கும் நோக்கோடு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சத்தம் போட்டு வாதிட்டார். இதனால் கோபம் அடைந்த நீதிபதி, இது சந்தை அல்ல, நீதிமன்றம் என்று கண்டித்தார். இதையடுத்து, ரங்கராஜ நரசிம்மன் நீதிபதியிடம் மன்னிப்பு கேட்டார். பிறகு வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, புகாரை மேற்கொண்டு விசாரிக்க முகாந்திரம் உள்ளது. இதுகுறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.
The post முதல்வருக்கு எதிராக அவதூறு பரப்பியவர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.
