ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன், தனது யூடியூப் சேனலில் முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்ட ரங்கராஜன் நரசிம்மன், நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் வழக்கு தொடர்ந்திருந்தார். ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணையின்போது சத்தமாக பேசிய ரங்கராஜன் நரசிம்மனுக்கு நீதிபதி இளந்திரையன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது சந்தை அல்ல; நீதிமன்றம் என ரங்கராஜன் நரசிம்மனுக்கு எச்சரிக்கை .விடுத்துள்ளார்.
The post ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு appeared first on Dinakaran.
