திருவாரூர், மார்ச் 13: திருவாரூரில் ரூ. 65 லட்சம் மதிப்புடைய அரசு கட்டிடங்களை கலெக்டர் மோகனச்சந்திரன் மற்றும் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் திறந்துவைத்தனர். திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 16 லட்சம் மதிப்பில்திருவாரூர் பனகல் சாலையில் கட்டப்பட்டஅரசு நியாய விலை கட்டிடம் திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் மோகனச்சந்திரன் தலைமை வகித்தார், எம்எல்ஏ பூண்டி கலைவாணன் முன்னிலை வகித்தார்.
இதில் கலெக்டர் மற்றும் எம்எல்ஏ கட்டிடத்தினை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினர். இதேபோல் திருவாரூர் கொத்ததெருவில் ரூ.16 லட்சம் மதிப்பில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு தொகுதியில் இருந்து கட்டப்பட்ட அரசு நியாயவிலை கட்டிடம் மற்றும் திருவாரூர் ஐ.பி.கோயில் தெருவில் மாநில நிதிக்குழு பள்ளி மேம்பாட்டு நிதி மூலம் ரூ .33 லட்சம் மதிப்பில் நகராட்சி துவக்க பள்ளியில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டிடம் என மொத்தம் ரூ. 65 லட்சம் மதிப்பில் கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ சௌமியா, கூட்டுறவு இணைப்பதிவாளர் சித்ரா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சௌந்தர்ராஜன், நகராட்சி தலைவர் புவனப்பிரியா செந்தில், கமிஷனர் தாமோதரன், நியமனக்குழு உறுப்பினர் பிரகாஷ், கவுன்சிலர்கள் செந்தில், சங்கர், அசோகன், சின்னவீரன், அய்யனார், விஜயலட்சுமிசங்கர், தினேஷ்குமார், கஸ்தூரி மணிராவ், பெனாசிர்ஜாஸ்மின், ஷகிலா பானு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post திருவாரூரில் ரூ.65 லட்சத்தில் அரசு கட்டிடங்கள் திறப்பு appeared first on Dinakaran.
