கிருஷ்ணகிரி, மார்ச் 13: கெலமங்கலம் அருகேயுள்ள கடூர் கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி கனகா(27). இவர் அனுசோனை என்ற இடத்தில் தங்கியிருந்து, பென்னாங்கூர் பகுதியில் உள்ள கார்மென்ட்சில் பணியாற்றி வருகிறார். கடந்த 8ம்தேதி இரவு, வீட்டில் இருந்து வெளியே சென்ற கனகா, மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி முனிராஜ், கெலமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில், தனது மனைவி கனகா அடிக்கடி ஒருவரிடம் போனில் பேசி வந்தார். இதனால் அந்த நபர் ஆசைவார்த்தை கூறி, அவரை கடத்தி சென்றிருக்கலாம் எனவும், அவரை மீட்டு தர வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
இதேபோல், கெலமங்கலம் ஜீவா நகரை சேர்ந்த 18 வயது இளம்பெண், கடந்த 9ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர், அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது தாய் கெலமங்கலம் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதில், கெலமங்கலம் மேல்தெருவை சேர்ந்த சுனில்குமார்(20) என்பவர், தனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
The post 2 இளம்பெண்கள் கடத்தல் appeared first on Dinakaran.
