சமுதாய வளைகாப்பில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை

 

திருவாரூர்,மார்ச் 12: திருவாரூர் அருகே நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைகளை எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் வழங்கினார். தமிழகத்தில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்காக அரசு மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பகுதியாக ஏழை மற்றும் பணக்காரர் பாகுபாடு இல்லாமல் கர்ப்பிணி பெண்கள் முழு ஆரோக்கியத்தோடு குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஏழை, எளிய கர்ப்பிணி பெண்களுக்காக அரசு மூலம் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இவ்வாறு நடத்தப்பட்டு வரும் விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி திருவாரூர் அருகே நேற்று மாங்குடி திருமண மண்டபம் ஒன்றில் மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வரிசைகளை எம்எல்ஏ பூண்டி கலைவாணன் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன் மற்றும் புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post சமுதாய வளைகாப்பில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை appeared first on Dinakaran.

Related Stories: