×

ஒன்றிய அமைச்சரின் உருவபொம்மை எரிப்பு

திருச்செங்கோடு, மார்ச் 12: திருச்செங்கோடு தலைமை தபால் அலுவலகம் முன்பு, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மற்றும் திருச்செங்கோடு நகர திமுக சார்பில், ஒன்றிய கல்வித்துறை ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரபிரதானை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி தலைமை வகித்தார். நகர செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். இதில் ஒன்றிய அமைச்சரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, அவரது உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது.

The post ஒன்றிய அமைச்சரின் உருவபொம்மை எரிப்பு appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Tiruchengode ,Head Post Office ,Namakkal West District DMK ,Tiruchengode City DMK ,Union Education Minister ,Dharmendra Pradhan ,Union ,
× RELATED குடிசை வீடு தீயில் எரிந்து சாம்பல்