தொடர்ந்து தினமும் பஞ்ச மூர்த்திகள் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகின்றது. கடந்த 8ம் தேதி 6ம் திருவிழாவாக கோயிலை கட்டிய விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சியளித்தல் என்ற ஐதீக திருவிழா நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 9ம் நாள் திருவிழாவாக இன்று காலையில் தேரோட்டம் நடந்தது. காலை 5.50 மணியளவில் தொடங்கியது. முன்னதாக விநாயகர், சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கும் பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பஞ்ச மூர்த்திகள் அருள்பாலித்தனர். சிவாச்சாரியார்கள் மகா தீபாராதனைகள் காண்பிக்க விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் மற்றும் பஞ்சமூர்த்திகளும் அலங்கரிக்கப்பட்ட 5 தேர்களிலும் எழுந்தருளினர். அப்போது பக்தர்கள் ஓம் நமசிவாய கோஷங்களை எழுப்பி வழிபட்டனர்.
தொடர்ந்து காலை 5.50 மணி அளவில் விநாயகர் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அதனை தொடர்ந்து 6.50 மணி அளவில் வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் எழுந்தருளிய தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேரானது நான்கு கோட்டை வீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்ததும், விருத்தகிரீஸ்வரர் எழுந்தருளிய தேரும், விருத்தாம்பிகை அம்மன் எழுந்தருளிய தேரும் சண்டிகேஸ்வரர் எழுந்தருளிய தேரும் ஒன்றன்பின் ஒன்றாக சென்று நான்கு கோட்டை வீதிகளையும் வலம் வந்து நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து 10ம் நாள் திருவிழாவாக நாளை 12ம் தேதி மாசி மக தீர்த்தவாரி உற்சவமும், நாளை மறுநாள் 13ம் தேதி தெப்ப உற்சவமும், 14ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும், 15ம் தேதி முதல் விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது.
The post விருத்தகிரீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம் appeared first on Dinakaran.
