கோவை: வாட்ஸ்அப் குழுவில் லாட்டரி குலுக்கல் பரிசு என்று கூறி மோசடி செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர். ரத்தினபுரி பகுதியை சேர்ந்த சகோதரர்கள் கண்ணன், ராஜசேகர் கைதாகினர். மோசடி செய்த பணத்தில் 213 கிராம் தங்க நகைகளை வாங்கி உள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.