மதுரை: உலகம் முழுவதிலும் மகளிர் தினம் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரை மாநகர சரக காவல்துறையின் சார்பில் நேற்று பல்வேறு விழிப்புணர்வு மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மகளிர் தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்கள், ஆயுதப்படைப்பிரிவு, சைபர் க்ரைம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் பணிபுரியும் 950 மகளிர் போலீசாருக்கு நேற்று ஒரு நாள் முழுவதிலும் விடுப்பு வழங்கி மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார். இதன் காரணமாக ெபண் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அனைத்து பெண் போலீசாரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
The post மகளிர் தின ஸ்பெஷல் 950 பெண் போலீசுக்கு ஒரு நாள் விடுப்பு appeared first on Dinakaran.