டான்செட் மற்றும் சீட்டா நுழைவுத் தேர்வு ஹால்டிக்கெட் இன்று வெளியீடு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் டான்செட் நுழைவுத்தேர்வு செயலாளர் பேராசிரியர் ஸ்ரீதரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு சார்பில் எம்பிஏ, எம்சிஏ சேர்க்கைக்கான டான்செட் பொது நுழைவுத் தேர்வையும், எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான் சேர்க்கைக்கான பொது பொறியியல் நுழைவுத் தேர்வையும் (சீட்டா) அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. டான்செட் எம்சிஏ நுழைவுத்தேர்வு மார்ச் 22ம் தேதி நடைபெற உள்ளது.

இத்தேர்வுக்கு 10,287 பேர் விண்ணப்பித்துள்ளனர். டான்செட் எம்பிஏ நுழைவுத்தேர்வு மார்ச் 22ம் தேதி பிற்பகல் நடைபெறுகிறது. இத்தேர்வெழுத 22,806 பேர் விண்ணப்பித்துள்ளனர். சீட்டா நுழைவுத்தேர்வு மார்ச் 23ம் தேதி காலை நடக்கிறது. இத்தேர்வுக்கு 5208 பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

மேற்கண்ட நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் சனிக்கிழமை (இன்று) இணையதளத்தில் (www.tancet.annauniv.edu/tancet) பதிவேற்றம் செய்யப்படும். 3 நுழைவுத்தேர்வுகளும் சேர்த்து மொத்தம் 38,301 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்காக தமிழகம் முழுவதும் 16 நகரங்களில் 42 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post டான்செட் மற்றும் சீட்டா நுழைவுத் தேர்வு ஹால்டிக்கெட் இன்று வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: