திருப்பூர் : திருப்பூர் SBI வங்கியில் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணம் மாயமானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10,000 முதல் ரூ.35,000 வரை மாயமானதாக புகார் கூறப்படுகிறது. வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.