வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே கடும் வாக்குவாதம்

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சொல்வதைக் கேட்கவில்லை என்றால் ஆதரவு இல்லை என்று உக்ரைன் அதிபரிடம் நேரடியாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ரஷியா உடனான போரில் உக்ரைனுக்கு 3 ஆண்டுகளாக அமெரிக்கா செய்த நிதியுதவிக்கு பதிலாக, உக்ரைனில் உள்ள அரியவகை கனிம வளங்களின் உரிமையை காலவரையில்லாமல் வழங்க ட்ரம்ப் கேட்டுள்ளார்

போரில் உக்ரைனுக்கு உத்தரவாதம் அளித்தால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயார் என ஸெலன்ஸ்கி தெரிவிக்க, உத்தரவாதம் அளிக்க ட்ரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலும், மதிய உணவை புறக்கணித்தும் ஸெலன்ஸ்கி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். ஸெலன்ஸ்கி அமைதியை மீட்க தயாராக இல்லை. அவரது செயல் அவமதிப்பாக உள்ளது. மீண்டும் நான் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளேன் என ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்

The post வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே கடும் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Related Stories: