- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- கன்னியாகுமாரி
- புதுக்கோட்டை
- தஞ்சாவூர் தேவஸ்தானம்
- சென்னை
- தஞ்சாவூர் அரண்மனை
- தேவஸ்தானம்
- புதுக்கோட்டை தேவஸ்தான நிர்வாகம்...
சென்னை: கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக ₹ 27 கோடிக்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத 490 கோயில்கள், புதுக்கோட்டை தேவஸ்தான நிர்வாகத்தில் உள்ள 225 கோயில்கள் மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தில் உள்ள 88 கோயில்கள் ஆகியவற்றுக்கு நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக தமிழக அரசால் ஆண்டுதோறும் மானியத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி, தற்போது தேவஸ்தான கோயில்கள் நிர்வாகம் மற்றும் பராமரிப்புகளுக்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் அரசு மானியத் தொகை கன்னியாகுமரி தேவஸ்தானத்திற்கு 8 கோடி ரூபாயிலிருந்து 13 கோடி ரூபாயாகவும், புதுக்கோட்டை தேவஸ்தானத்திற்கு 5 கோடி ரூபாயிலிருந்து 8 கோடி ரூபாயாகவும் மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு 3 கோடி ரூபாயிலிருந்து 6 கோடி ரூபாயாகவும் உயர்த்தி, அதற்கான காசோலைகளை தமிழ்நாடு முதல்வர் நேற்று அந்தந்த கோயில்களின் அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தர், கூடுதல் ஆணையர்கள் பழனி, திருமகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post கோயில் பராமரிப்பு செலவிற்கான அரசு மானியம் உயர்வு; கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய தேவஸ்தான கோயில்களுக்கு ₹ 27 கோடிக்கான காசோலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.
