×

திராவிட மாடல் ஆட்சியில் 4.5 ஆண்டில் 1.99 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை: முதலமைச்சர் பேச்சு

திண்டுக்கல்: ‘திராவிட மாடல் ஆட்சியில் 4.5 ஆண்டில் 1.99 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை’ என திண்டுக்கல்லில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடினார். மேலும் ‘பிரிட்டிஷ் படைக்கு எதிராக போராடிய வேலு நாச்சியார், தங்களது அடுத்தகட்ட போராட்டத்துக்கு திட்டமிட்ட ஊர்தான் திண்டுக்கல். தீரர்கள் வாழ்ந்த திண்டுக்கல் மாவட்டத்தில் மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சியில் 1.79 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல். திராவிட மாடல் ஆட்சியில் 4.5 ஆண்டில் 1.99 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை. மக்கள் முகத்தில் மகிழ்ச்சியை காணவே ஏராளமான திட்டங்களை செய்துள்ளோம்’ எனவும் முதலமைச்சர் உரையாற்றினார்.

Tags : Chief Minister ,Dindigul ,M.K. Stalin ,Velu ,British ,
× RELATED தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து...