அதனைத் தொடர்ந்து, டாக்டர் எஸ்.சௌமியா சிவதாண்டவ ஸ்துதி, நாட்டிய வடிவு, வாய்ப்பாட்டு மற்றும் தாளவாத்திய இன்னிசை, வில்லுப்பாட்டு, இறை அருட்செல்வி தியா பக்தி பாடல்கள், நந்தினி சுரேஷ் பரதநாட்டிய நிகழ்ச்சி, கலை இளமணி குமாரி ஸ்வராத்மிகா குழுவினரின் சிவபக்தி பாடல்கள், ஊர்மிளா சத்ய நாராயணா பரதநாட்டிய நிகழ்ச்சி, பாரதி பாஸ்கர் சொற்பொழிவு, சிவசக்தியும் சினிமாவும் என்ற இசை நிகழ்ச்சி, கலைமாமணி தேச மங்கையர்க்கரசி சிவ உபதேசம் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் பழனி, திருமகள், ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் ரேணுகாதேவி, கவெனிதா, திருக்கோயில் அறங்காவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் மகா சிவராத்திரி விழா: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.
