காரைக்குடி, பிப். 26: காரைக்குடி அருகே கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடந்தப்பட்டது. கல்லூரி முதல்வர் சசிகுமார் வரவேற்றார். விவேகனாந்தா கல்விக்குழும தலைவர் எம்.சொக்கலிங்கம் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் இயந்திரவியல் துறை, மின்னியல், மின்னணுவியல் மற்றும் மெக்கட்ராணிக்ஸ் துறை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வளாக நேர்காணல் நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. தனியார் நிறுவன மனித வள மேம்பாட்டு அலுவலர் பினேஷ்குமார் வளாகத் தேர்வினை நடத்தினார். விரிவுரையாளர் ஸ்ரீதர் வாழ்த்துரை வழங்கினார். வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் வைத்தியநாதன் நன்றி கூறினார்.
The post விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.
