செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளியில் 36வது ஆண்டுவிழா மாணவர்களுக்கு பரிசு: அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

திருவள்ளூர்: சென்னை அடுத்த திருநின்றவூர், செல்வராஜ் நகரில் உள்ள செயின்ட் ஜான்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 36வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த விழாவிற்கு பள்ளியின் தலைவர் ஒய்.ஜான்சன் தலைமை தாங்கினார். நிர்வாக அறங்காவலர் குலோரி ஜான்சன், துணைத் தலைவர் ஜான் வெஸ்லி, முதன்மை முதல்வர் ஜாஸ்மின் சுஜா, அறங்காவலர் எஸ்.ஆர்.ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதல்வர் ஷிபா ஜெனிமலர் அனைவரையும் வரவேற்றார். முதல்வர் நியூஜிலின் ஜெபா ஆண்டறிக்கையை வாசித்தார். இந்த விழாவில் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு அனைத்து வகுப்புகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்தப் பள்ளி கடந்த 36 ஆண்டுகளாக பல்வேறு திறமையான மாணவர்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

மாணவர்களாகிய உங்களது பெற்றோர்கள் உங்களை கஷ்டப்பட்டு படிக்க வைக்கின்றனர். அவர்களது கஷ்டத்தை உணர்ந்து நீங்கள் நல்ல முறையில் படித்து வெற்றி பெற வேண்டும். ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை மறைந்துள்ளது. அந்த திறமைக்கு ஏற்றவாறு நீங்கள் உங்களை தயார் படுத்திக்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்றார்.

இதில் நகர்மன்ற தலைவர் உஷாராணி ரவி, நகர திமுக செயலாளர் தி.வை.ரவி, நகர்மன்ற துணைத் தலைவர் சரளா நாகராஜ், 2வது வார்டு கவுன்சிலர் தங்கராஜ், ஓய்வு பெற்ற போலீஸ் டிஎஸ்பி துரைப்பாண்டியன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினர். முடிவில் பள்ளி துணை முதல்வர் சுமதி நன்றி கூறினார்.

The post செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளியில் 36வது ஆண்டுவிழா மாணவர்களுக்கு பரிசு: அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: