ரூ.69 லட்சத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள்

பணகுடி,பிப்.22: ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் காவல்கிணறு-வடக்கன்குளம் சாலையில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி அருகே ரூ.8 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை, ரோஸ்மியாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டுமான பணிக்கு தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். நதிப்பாறையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ரேஷன் கடை, வடக்கு வேப்பிலான்குளத்தில் ரூ.8 லட்சத்தில் ரேஷன் கடை, செம்பாட்டில் ரூ.8 லட்சத்தில் ரேஷன் கடை ஆகியவற்றை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், செயல் அலுவலர் கணேசன், பணகுடி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, முன்னாள் தலைவர் அசோகன், நகர செயலாளர் தமிழ்வாணன், மதிமுக சங்கர், மாணிக்கம், கவுன்சிலர்கள் கோபி கோபாலக்கண்ணன், அலீம், முத்துக்குமார், ஜெயராம், பூங்கோதை, சொரிமுத்து, ஆனந்தி, செயற்பொறியாளர் ஜெயந்தி, அரசு ஒப்பந்ததாரர்கள் செல்வின் திரவியராஜ், ஜெகன், சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ரூ.69 லட்சத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: