குறிப்பாக உறுப்பு துண்டிக்கப்பட்ட இடத்தில் ரத்தப்போக்கை நிறுத்த வேண்டும். முடிந்தால் காயமடைந்த பகுதியை சற்று உயரமாக வைத்திருக்க வேண்டும். துண்டிக்கப்பட்ட பகுதியை ஒரு சுத்தமான துணி அல்லது கிருமிகள் அற்ற மென்மையான துணியில் வைத்து ஒரு பிளாஸ்டிக் பை அல்லது சுத்தமான ஒரு பெட்டியில் வைக்க வேண்டும். துண்டிக்கப்பட்ட பகுதியைச் சுற்றி சிறிய ஐஸ் கட்டி துகள்களைப் பயன்படுத்தி குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.
ஆனால் ஐஸ் கட்டியுடன் அந்த துண்டிக்கப்பட்ட உறுப்பு நேரடியாக தொடர்பில் இருக்கக்கூடாது. அப்படி நேரடி தொடர்பு ஏற்பட்டால் திசு சேதம் ஏற்படக் கூடும். துண்டிக்கப்பட்ட பகுதியை 4 முதல் 6 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு செய்தால் துண்டிக்கப்பட்ட உறுப்பு மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும். அதிநவீன நுண் அறுவை சிகிச்சை (மைக்ரோசர்ஜிகல்) கருவிகள், சூப்பர்-மைக்ரோசர்ஜிகல் நுட்பங்களைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை நிபுணர்கள் எலும்புகள், தசைநாண்கள், நரம்புகள், ரத்த நாளங்களை கவனமாக மீண்டும் இணைத்து, ரத்த ஓட்டத்தை மீட்டெடுத்து, கை செயல்பாட்டை உறுதி செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினர்.
The post 4 முதல் 6 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் உடலில் துண்டிக்கப்பட்ட பகுதியை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும்: அப்போலோ மருத்துவமனை நிபுணர்கள் பேட்டி appeared first on Dinakaran.
