சமீபத்தில் ஆட்டோவில் பயணம் செய்யும் முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ.50 கட்டணம் என ஆட்டோ ஓட்டுனர்கள் தாங்களாக நிர்ணயம் செய்ததாக தகவல் வெளியானது. ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என போக்குவரத்துத்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலையில் கிண்டியில் உள்ள அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு ஆட்டோ தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன.
பேச்சுவார்த்தை நிறைவில் ஆட்டோ கட்டணம் உயர்வது குறித்தும், அதேபோல் Ola, Uber போன்ற தனியார் நிறுவனங்களுக்கு அரசின் சார்பில் செயலி தயாரித்து அதனை ஆட்டோ ஓட்டுனர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருப்பதால், இறுதியில் புதிய கட்டணம் அமல்படுத்த வாய்ப்புள்ளதா என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அமைச்சர் சிவசங்கர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post ஆட்டோ கட்டணம் உயர்வு குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.