விசாரணையில், அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியை சேரந்த யுவராஜ் (19), அவரது நண்பர் பல்லாவரம் தில்லி தெருவை சேர்ந்த அலி உசைன் ஷா (21) என்பதும், இதில் யுவராஜ் தனது இடுப்பில் 2 அடி நீள பட்டாக்கத்தி வைத்திருந்தது தெரியவந்தது. இவர், காவல் நிலையம் அருகே ‘ரீல்ஸ்’ செய்யும் வகையில் கையில் பட்டாக்கத்தி எடுத்து வந்ததாக கூறியுள்ளார்.
ஆனால் இன்ஸ்பெக்டர் யுவராஜ் புகைப்படத்தை பழைய குற்றவாளிகளுடன் ஒப்பிட்டு பார்த்த போது, அவர் மீது 6 குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. மேலும், அரும்பாக்கம் பகுதியில் குற்றம் செய்யும் நோக்கில் யுவராஜ் மற்றம் அவரது நண்பர் அலி உசைன் ஷா ஆகியோர் பட்டாக்கத்தியுடன் வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து 2 பேரையும் கைது செய்தனர்.
The post ஆட்டோவில் கத்தியுடன் சுற்றிய 2 ரவுடிகள் கைது appeared first on Dinakaran.