1.5 மீ. சாலைப் பணி மேற்கொண்டு ரூ.36 கோடி சுங்கக் கட்டணம் வசூல் : தேசிய நெடுஞ்சாலை துறையின் முறைகேடுகள் அம்பலம்

டெல்லி : திருவண்ணாமலை அருகே 1.5 மீ மட்டுமே சாலை பணிகளை மேற்கொண்டு ரூ.36 கோடியை சுங்கக்கட்டணமாக தேசிய நெடுஞ்சாலைத் துறை வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது. வேலூர் – திருவண்ணாமலை – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை 110 கிலோமீட்டர் நீளம் கொண்ட இருவழிப்பாதையாக உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் வல்லம், ஏனம்கரியாநந்தல், தென்னம்மாதேவி ஆகிய இடங்களில் 3 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சாலையை மேம்படுவத்துவதாகக் கூறி சாலையின் இருபுறமும் ஒன்றரை மீட்டர் மட்டுமே புதிய சாலையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைத்துள்ளது.

வங்கி கடன் எதையும் பெறாமல், சாலை போக்குவரத்து அமைச்சகம் ஒதுக்கிய நிதி இதற்காக பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில் வேலூர் – திருவண்ணாமலை – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடிகள் மூலம் 2023 ஏப்ரல் முதல் 2024 நவம்பர் வரை வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.36 கோடி சுங்கக் கட்டணமாக வசூல் செய்யப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலம் ஆகியுள்ளது. வங்கிக் கடன்கள் இல்லாமல் மேற்கொள்ளப்படும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு குறைந்த கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற விதியை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மீறி உள்ளது அம்பலமாகி உள்ளது.

The post 1.5 மீ. சாலைப் பணி மேற்கொண்டு ரூ.36 கோடி சுங்கக் கட்டணம் வசூல் : தேசிய நெடுஞ்சாலை துறையின் முறைகேடுகள் அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: