இந்த ஷாப்பிங் திருவிழாவை கோவை மாநகராட்சி மேயர் கே.ரங்கநாயகி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். கோவை தினகரன் பொது மேலாளர் எம்.சையது முகமது, அன்னபூரணா பொறியியல் கல்லூரி சேலம், பேராசிரியர்கள் மோகன்ராஜ், ஹரிஹரன், மெடிமிக்ஸ் ஆயுர்வேதிக் சோப் மாநில விற்பனை மேலாளர் எஸ்.ஹரிஹரன், கீதம் மேட்ரிமோனியல் சிஇஓ கீதா தெய்வசிகாமணி, நேகாஸ் சில்க்ஸ் நிர்வாக இயக்குநர் ரணிதா ராஜேந்திரசிங் ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்தனர். காண்போரை கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட ஸ்டால்களை பெண்கள் மட்டுமின்றி குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் குடும்பத்தோடு வந்து ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
இந்த ஷாப்பிங் திருவிழாவில் அழகு சாதன பொருட்கள், சமையல் அறை சாதனங்கள், ஹெல்த் கேர் பொருட்கள், மணப்பெண் உடைகள், பேஷன், நுகர்வோர் பொருட்கள், பேஷன் நகைகள், கைவினை பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள், வீட்டிற்கான பர்னிச்சர்கள், ஊட்டச்சத்து பொருட்கள், ஆர்கானிக் உணவு பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், ரியல் எஸ்டேட், புத்தகங்கள், விளையாட்டு உடைகள், ஸ்டேஷனரி பொருட்கள், எலக்ட்ரானிக் கெஜெட்டுகள், ஆட்டோ மொபைல், அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்கள் என பெண்கள், பெரியவர்கள் என அனைவருக்கும் தேவைப்படக்கூடிய வகையிலான அனைத்து விதமான பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த ஸ்டால்களில் தரமான பொருட்களை நியாயமான விலையில் பொதுமக்கள் வாங்கிச்சென்றனர்.
ஷாப்பிங் திருவிழாவை அவர்கள் எளிதாக பார்வையிடுவதற்கு வசதியாக அனைத்து வகையிலும் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலான உணவு ஸ்டால்களும் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கண்காட்சியினை தினகரன் குழுமத்துடன் அன்னபூர்ணா பொறியியல் கல்லூரி சேலம், மெடிமிக்ஸ் ஆயுர்வேதிக் சோப், கீதம் மேட்ரிமோனியல், நேகாஸ் சில்க்ஸ் ஆகியோர் இணைந்து வழங்குகின்றனர். இந்த ஷாப்பிங் திருவிழா நாளை (16ம் தேதி) வரை நடக்கிறது.
இன்று 2வது நாளாக நடைபெறும் இந்த ஷாப்பிங் திருவிழாவினை காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம். தோழி ஷாப்பிங் திருவிழாவில் கலந்து கொள்பவர்களை மகிழ்விக்கும் வகையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்பட்டன. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த குலுக்கல் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நேற்று நடந்த திருவிழாவின்போது ஒரு மணி நேரத்துக்கு ஒருவர் என பலர் இந்த பரிசு மழையில் நனைந்தனர். ஷாப்பிங் திருவிழா நடைபெறும் அனைத்து நாட்களுக்கும் இந்த பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கோவை கொடிசியாவில் 2 நாட்கள் நடக்கிறது தோழி பிரமாண்ட ஷாப்பிங் திருவிழா appeared first on Dinakaran.
