வல்லக்கோட்டை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை வசூல் ரூ29.36 லட்சம்

ஸ்ரீபெரும்புதூர்: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நேற்று உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டத்தில் ரூ29.36 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் 9 பொது உண்டியல்கள், 1 திருப்பணி உண்டியல் என மொத்தம் 10 உண்டியல்கள் உள்ளன. இந்நிலையில், காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கார்த்திகேயன், ஆய்வர் திலகவதி, கோயில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், அறங்காவலர்கள் செந்தில்தேவராஜ், விஜயகுமார் மற்றும் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் முன்னிலையில், இக்கோயிலின் 10 உண்டியல்களும் நேற்று திறந்து எண்ணப்பட்டன.

இதில், பொது உண்டியல்களில் 25 லட்சத்து 2 ஆயிரத்து 611 ரூபாய் மற்றும் திருப்பணி உண்டியலில் 4 லட்சத்து 34 ஆயிரத்து 230 ரூபாய் என மொத்தம் ரூ29 லட்சத்து 36 ஆயிரத்து 841 ரூபாயும், 70 கிராம் தங்கமும், 1,900 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

The post வல்லக்கோட்டை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை வசூல் ரூ29.36 லட்சம் appeared first on Dinakaran.

Related Stories: