அந்த மனுவில், குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து பெற்றோருக்கு முறையாக பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவிக்கவில்லை. பள்ளி நிர்வாகம், கண்காணிப்பு கேமரா காட்சிகளை அழிக்கவும், சாட்சிகளை கலைக்கவும் வாய்ப்புள்ளது. குழந்தையின் உடையில் ரத்தக்கறை குறித்து போலீசாரிடம் தெரிவித்தபோது, உடையை திருப்பி தரும்படியும், இல்லாவிட்டால் வழக்கை முடித்து வைத்து விடுவதாக விக்கிரவாண்டி போலீசார் மிரட்டினர். குழந்தை மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளதால், விசாரணையை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும்என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், சம்பவம் தொடர்பாக டி.எஸ்.பி. தலைமையில் புலன் விசாரணை நடைபெற்று வருவதாகவும், 23 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதனையடுத்து, வழக்கின் புலன் விசாரணையை விரைந்து முடித்து, 12 வாரங்களில் இறுதி அறிக்கையை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், சிசிடிவி காட்சிகளை மாணவியின் தந்தையிடம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற மறுப்பு தெரிவித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
The post பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த வழக்கு.. இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு!! appeared first on Dinakaran.
