ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. பெருந்துறை அரசு பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள், 8.30 மணிக்கு மின்னணு வாக்குகள் எண்ணப்படும் மொத்தம் 14 மேசைகளில் வாக்கு எண்ணும் பணியில் 51 பேர் ஈடுபட உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.