சென்னை: அபுதாபி சென்று விமானத்தில் சென்னை திரும்பிய பெண்ணிடம் பறிமுதல் செய்த 10 தங்க வளையல்களை ஒப்படைக்க ஆணையிட்டுள்ளது. 135 கிராம் எடையுள்ள 10 தங்க வளையல்களை பெண்ணிடம் திருப்பி ஒப்படைக்க சுங்கத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. மனுதாரர் தங்க வளையல்களை மறைத்து எடுத்து வராத நிலையில் அவற்றை பறிமுதல் செய்தது முறையற்றது என்றும் இந்தியாவில் திருமண நிகழ்வின்போது 10 தங்க வளையல்கள் அணிவது மரபுதான் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
The post அபுதாபி சென்று விமானத்தில் சென்னை திரும்பிய பெண்ணிடம் பறிமுதல் செய்த 10 தங்க வளையல்களை ஒப்படைக்க ஆணை appeared first on Dinakaran.