உபி.க்கு பாஜ தொண்டர்கள் இறக்குமதி

உத்தர பிரதேசத்தில் பாஜ.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தாராசிங் சவுகான் மற்றும் அப்னாதளம் (சோனாவால்) எம்எல்ஏ ஆர்.கே.வர்மா ஆகியோரை கட்சியில் இணைத்துக் கொண்ட பிறகு, லக்னோவில் உள்ள கட்சி தலைமையகத்தில் அகிலேஷ் யாதவ் அளித்த பேட்டி வருமாறு: சமாஜ்வாடி தொண்டர்கள் யாரும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் உபி.யில் இல்லை. ஆனால், குஜராத், மத்திய பிரசேதம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்தும் தொண்டர்களை பாஜ இறக்குமதி செய்துள்ளது. இவர்கள் வெறுப்பு, வதந்திகள், சதிகள் பரப்புவதற்காகவும், ஓட்டுக்கு பணம் வினியோகம் செய்வதற்காகவும் வந்துள்ளனர் என்று சமூகவலைதளங்களில் புகைப்படங்களுடன் செய்திகள் வருகின்றன. இது குறித்து மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதுவேன். தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தேர்தல் சுமூகமாக நடப்பது கடினம். கான்பூர் முன்னாள் காவல் ஆணையர் அசிம் அருண் பாஜ.வில் இணைந்துள்ளார். அவருடன் பணியாற்றிய அதிகாரிகளை தேர்தல் பணியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்தை நாடுவேன். இவ்வாறு அவர் கூறினார்….

The post உபி.க்கு பாஜ தொண்டர்கள் இறக்குமதி appeared first on Dinakaran.

Related Stories: