சட்டவிரோத மதமாற்றத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை: ராஜஸ்தான் பேரவையில் மசோதா தாக்கல்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் மாநில சட்டபேரவையில் சட்டவிரோதமான மதமாற்றங்களை தடுக்கும் வகையில் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. சுகாதார அமைச்சர் கஜேந்திர சிங் கிம்சார் மசோதாவை நேற்று தாக்கல் செய்தார். அவையில் உறுப்பினர்களின் விவாதங்களுக்கு பின் மசோதா நிறைவேறியது.

தவறான சித்தரிப்பு, பலாத்காரம், வற்புறுத்துதல் அல்லது மோசடியான வழிமுறைகள் மற்றும் திருமணம் மூலம் மதமாற்றம் செய்வது குற்றமாகும். இதற்கு 1 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை தண்டனை வழங்கப்படும்.மேலும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மைனர், பெண், பட்டியல் வகுப்பினர், பழங்குடியின நபர் தொடர்பான விதிகளை மீறினால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

கூட்டாக மதமாற்றம் செய்பவருக்கு வழங்கப்படும் தண்டனை மூன்று ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகள் வரைநீட்டிக்கப்படும். யாராவது வேறு மதத்திற்கு மாற விரும்பினால், அவர்கள் 60 நாட்களுக்கு முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post சட்டவிரோத மதமாற்றத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை: ராஜஸ்தான் பேரவையில் மசோதா தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: