அதில், கட்சி தொடங்கி 15 ஆண்டுகளாகியும் ஒரு கட்டமைப்பை உருவாக்க சீமான் கவனம் செலுத்தவில்லை என குற்றச்சாட்டியுள்ளார். கட்சி அமைப்பு விதிகளை 3 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிக் கொடுத்த போதும் அதை சீமான் படித்துக்கூட பார்க்கவில்லை. எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும் அது இயங்க விதிகள் தேவை, அதைவிட மிக முக்கியம் ஒழுக்கமுள்ள தலைவன். ஒழுக்கமுள்ள மிகச் சிறந்த தலைவன் இல்லாவிட்டால் அனைத்தும் கேலிக் கூத்தாகிவிடும். பெரியார் குறித்த பேச்சுக்காக சீமான் மறுப்பு தெரிவிப்பார் என்று எதிர்பார்த்தேன்; ஆனால் அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை என ஜெகதீச பாண்டியன் புகார் தெரிவித்துள்ளார்.
The post நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு!! appeared first on Dinakaran.