வடசென்னை வளர்ச்சிக்காக ரூ.1000 கோடியில் பணிகள்
வடசென்னையின் வளர்ச்சிக்காக ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சென்னை நகரின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை செய்துள்ளோம். ஓராண்டு காலத்தில் அனைத்து பணிகளையும் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை நகரின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகள்
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு பல்வேறு பணிகளை சென்னைக்கு செய்து வருகிறோம்.
அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார்
எல்லா பிரச்சனைகளிலும் அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு வைத்தார். ஆளுநர் தொடர்ந்து அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். ஆளுநரின் செயல்பாடுகள் அரசுக்கு சிறப்புதான் சேர்க்கிறது, ஆளுநர் தொடர்ந்து அப்படியே செயல்பட்டு வரட்டும்.
வடசென்னை வளர்ந்த சென்னையாக ஓராண்டுக்குள் மாறும்
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மொத்தம் 252 பணிகள் நடைபெற்று வருகின்றன. வடசென்னை வளர்ந்த சென்னையாக ஓராண்டுக்குள் மாறும். ரூ.6,350 கோடியில் வடசென்னை வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது; எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு மரியாதை அளிக்க தயாராக இல்லை
The post வடசென்னையின் வளர்ச்சிக்காக ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.