இந்நிலையில், கடந்த 2013 ஏப்ரல் 15ம் தேதி ஐ.சி.எப்., காந்தி நகர் குடிசை மாற்று வாரிய பகுதியில் தன் தாயுடன் இம்மானுவேல் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த அம்முவின் தம்பி அப்பு அவரது நண்பர்கள் சேர்ந்து இம்மானுவேலை கத்தியால் வெட்டியதோடு, அருகில் கிடந்த கிரைண்டர் கல்லை எடுத்து தலையில் போட்டு கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.சி.எப். போலீசார், அப்பு உள்ளிட்ட 9 பேர் மீது கொலை, கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதில் ஒருவர் மட்டும் சிறுவன் என்பதால் அவர் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. மற்ற 8 பேர் மீதான வழக்கு சென்னை 18வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் மநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் என்.ஜெய்சங்கர் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி உமாமகேஸ்வரி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் அப்பு (23), ரஞ்சித் (23), செல்வா (23), வினோத் (23), இளையராஜா (23), காட்டுராஜா (22), அப்பன்ராஜ் (22), அம்மு (25) ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் மொத்தம் ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
The post முன் விரோதம் காரணமாக வாலிபர் கொலை 8 பேருக்கு ஆயுள் தண்டனை: கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.
