ஸ்ரீ சாஸ்தா மருந்தியல் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி


திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சாஸ்தா மருந்தியல் கல்லூரி சார்பில் கல்லூரியின் நிறுவனத் தலைவர் ஜம்புலிங்கம் பிறந்தநாளை முன்னிட்டு போதை மருந்து எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணியை கல்லூரி தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் தனபால் முன்னிலை வகித்தார். இந்த பேரணியில் 450 மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

நசரத்பேட்டை முதல் செம்பரம்பாக்கத்தில் உள்ள கல்லூரி வளாகம் வரை ஏறத்தாழ 5 கிமீ தூரம் ‘மதுவை ஒழிப்போம்’ ‘புகையிலையை கைவிடுவோம்’ ‘புகை நமக்கு பகை’ போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அப்போது, போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்கு மற்றும் மருத்துவர்கள் வழங்கும் மருந்துகளை அளவாக பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு வகைப்படுத்தினர். இந்த பேரணியில் கல்லூரி பேராசிரியர்கள், காவல்துறையினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post ஸ்ரீ சாஸ்தா மருந்தியல் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: